Maayavane-Prezanthi Shanmugavel/Mirun Pradhap
Maayavane-Prezanthi Shanmugavel/Mirun Pradhap无损flac下载mp3下载
Maayavane-Prezanthi Shanmugavel/Mirun Pradhap 在线试听歌词免费下载
மாயவனே மாயவனே
மயங்கினேன் காதலில்
மோகனனே என் மோகனனே
தொலைகிறேன் மோகத்தில்
கண்கள் பந்தாடுமே என்
உள்ளம் கொண்டாடுமே
உன் பேரை கேட்டாலே தேவதைக்கூட்டம்
நெஞ்சில் தோன்றி ஆட
எனை ஆள்கிற காதல்
அரசாங்கம் அது நீயா
எனை வாட்டிடும் காதல்
ரணம் தான் நீயா
மாயவனே மாயவனே
மயங்கினேன் காதலில்
வரவேண்டும் நீ என்னிடம்
உன்தோள்கள் என் ஓய்விடம்
சாய்ந்தே சிரிப்பேனே மெல்ல
அணைக்கும் உன்கரம்
பார்வைகள் தீமூட்டிடும்
பாஷைகள் போராடிடும்
உன் மூச்சின் வெப்பம் என்னில்
மூட்டும் போர்க்களம்
இதழ் நான்கும் மோதத்தானா
நெருக்கம் தந்த வேட்கை தானா
காதல் தந்த போதை தான் இந்த பேதை தான்
தடுமாறிப் போக
எந்தன் தடுமாற்றம் கண்டாய்
சிரிப்போடு தள்ளி நின்றாய்
சட்டென்றணைத்தெனை தலைகோதியே
விடைபெற்றுச் சென்றாய்
மாயவனே மாயவனே
மயங்கினேன் காதலில்
மோகனனே என் மோகனனே
தொலைகிறேன் மோகத்தில்
கண்கள் பந்தாடுமே என்
உள்ளம் கொண்டாடுமே
உன் பேரை கேட்டாலே தேவதைக்கூட்டம்
நெஞ்சில் தோன்றி ஆட
எனை ஆள்கிற காதல்
அரசாங்கம் அது நீயா
எனை வாட்டிடும் காதல்
ரணம் தான் நீயா
மாயவனே மாயவனே